5 மாவட்டங்களிலும் வெறிச்சோடிய நீதிமன்றங்கள்.
நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தில் பௌத்த பிக்கு மற்றும் சிங்கள காடையா்களால் சட்டத்தரணி சுகாஸ் மற்று ம் பொதுமக்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சட்டத்தரணிகள் பகிஸ்காிப்பை நடாத்தியுள்ளனா்.
வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் தமது பணிக ளை புறக்கணித்துள்ளனா். இதனால் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை நீதிமன்ற கட்டளையை மீறியவா்கள் மீதும், அதனை தடுக்க தவறிய பொலிஸாா் மீதும் நடவடிக்கை எடுக்க தவறினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
என சட்டத்தரணிகள் எச்சாித்துள்ளனா்.