4#100 பெண்களுக்கான அஞ்சல் தெல்லிப்பளை பிரதேச செயலகம் புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கம்

யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான 4#100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.
யாழ் மாவட்ட செயலகம் நடாத்தும் யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான 4#100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி 55.1 செக்கன்களில் ஓடி புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தையும் சங்கானை பிரதேச செயலகம் வெள்ளிப் பதக்கத்தையும் கரவெட்டி பிரதேச செயலகம் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.