Wed. Mar 11th, 2026

40 வருடங்களின் பின்னர் பெண்களுக்கான காற்பந்தாட்ட போட்டியில் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய அணி சாதனை

40 வருடங்களின் பின்னர் பெண்களுக்கான காற்பந்தாட்ட போட்டியில் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்து சாதனை படைத்துள்ளனர்.
இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சங்கம் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையில் 10 வயதுப் பிரிவினருக்கான Future Soccer Kings சவால் கிண்ணத்திற்கான காற்பந்தாட்ட தொடர் இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் முதல் போட்டியில் காங்கேசன்துறை நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய அணி இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலய அணியை 4:0 என்ற கோல் கணக்கிலும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியை 4:1 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed