Thu. Jul 17th, 2025

40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் வதிரி பொம்மேர்ஸ் அணி சம்பியன்

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியில் வதிரி பொம்மேர்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் கடந்த சனிக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் வதிரி பொம்மேர்ஸ் அணியை எதிர்த்து யாழ் பட்டஃபிளை அணி மோதியது.
இதில் வதிரி பொம்மேர்ஸ் அணி ஆட்ட நேர முடிவில் 10:7 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்