4 மணித்தியால சுற்றி வளைப்பில் பல்வேறு குற்றத்திற்காக 3265 பேர் கைது, 4667 பேர் மீது வழக்கு
இன்று 4 மணித்தியாலங்களில் நாடுபூராக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 3265 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 2 மணிமுதல் 6 மணிவரை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளாவிய ரீதியாக 14 695 பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக போலீஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 401 சாரதிகளும் .ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களை வைத்திருந்தமை தொடர்பில் 882 பேரும் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதுவிர, பல்வேறு குற்றச்செயலுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 1080 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது போக்குவரத்து விதி மீறல்களுக்காக 4667 சாரதிகள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்