39 ஓட்டங்களால் பற்றீசியன் வெற்றி
ஏபி பவுண்டேஷன் நடாத்தும் T- 20 கிரிக்கெட் தொடரில் பற்றீசியன் அணி வெற்றி பெற்றது.
இன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியில் நடைபெற்ற ஆட்டத்தில் பற்றீசியன் அணியை எதிர்த்து விக்டோரி அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பற்றீசியன் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணி சார்பில் பெற்றிக் 51, யூடர் 50, முரளி 23 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் விக்டோரி அணி சார்பில் பிரணவன் 2, திரேசன் ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விக்டோரி அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். அவ்வணி சார்பில் சிந்துஜன் 24, பிரசாந் 19, பிரணவன் 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் லிவிங்ஸ்டன், பெற்றிக், மைக்கேல் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்