Sun. Dec 8th, 2024

மஹிந்தவுக்கு வாக்களித்து நாட்டை காட்டு யுகத்திற்குள் தள்ளிவிடாதீா்கள்..!

மஹிந்தவுக்கும் அவா் சகாக்களுக்கும் மீண்டும் தமிழ் மக்கள் வாக்களித்தால் நாடு காட்டு யுகத்தை நோக்கி செல்லும். அவ்வாறான ஒரு நிலையை நீங்களே உருவாக்காதீா்கள். என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க எச்சாித்துள்ளாா்.

வடக்கு மாகாணத்திற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை வவுனியா மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதமா் ரணில் விக்கிரம சிங்க, வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், கடந்த அரசாங்கம் தார் வீதிகளையும் காப்பெற் வீதிகளையும் அமைத்திருந்ததே தவிர மக்களுடைய பொருளாதார ரீதியான அபிவிருத்திகளை ஏற்படுத்தவில்லை.

நாம் வடக்குப் பகுதி மக்களினுடையதும் நாட்டு மக்களினுடையதுமான பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் திட்டங்களையே முன்னெடுத்திருக்கிறோம்.

வவுனியாவைப் பொறுத்த வரை பொருளாதார மத்திய நிலையம்இ செட்டிக் குளத்தில் நீர் விநியோகத் திட்டம்இ வீட்டுத் திட்டங்கள்இ சுகாதார வசதி மேம்படுத்தல்இ வீதி அபிவிருத்தித் திட்டங்கள் என்பன இந்த அரசாங்கத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நாம் எதிர்வரும் காலங்களில் வன்னிப் பிரதேசத்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்குகின்ற வேலைத் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இந்த வேலைத் திட்டமானது தொழிற்சாலைகளை மாத்திரம் அமைத்து வேலைகளை வழங்குவதாக இருத்தல் கூடாது. தென்பகுதி மக்களுடைய நெல் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் வடக்கில் இருந்தே வருகின்றன.

ஆகவே இந்த உற்பத்தியை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக எவ்வாறு உயர்த்த முடியும் என்பது தொடர்பாக சிந்தித்து திட்டங்களை உருவாக்க வேண்டும்.

அதனூடாக வன்னி இளைஞர்களுக்கு அதிகளவான வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியும். அதனையே நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

ஆகவே இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். மீண்டும் எமக்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற போதே இவற்றைச் செயற்படுத்த முடியும்.

இதேவேளைஇ நெதர்லாந்து அரசாங்கத்திடம் இருந்து நிதியைப் பெறுவதற்கு முனைப்புடன் செயற்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்