Fri. Apr 19th, 2024

உண்மையில் மஹிந்த முழுமனதாகத்தான் கோத்தபாயவை அறிமுகப்படுத்தினரா , பேய் அறைந்த முகம் என்ன சொல்கின்றது

உண்மையில் மஹிந்த முழுமனதாகத்தான் கோத்தபாயவை அறிமுகப்படுத்தினரா , அவர் முகம் என்ன சொல்கின்றது
நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச , அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவை மக்கள் கூட்டணி கடசிகளின் ஜனாதிபதி வேட்பளராக அறிமுகம் செய்தார். இதன் போது வெளிவந்த படங்களில் மஹிந்த ராஜபக்சவின் முகபாவனைகள் அவருக்கும் அவர் செய்யும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாதது போன்றே தோன்றுகின்றது. தமிழில் அழகாக சொல்லவேண்டும் என்றால் பேய் அறைந்தவர் போல காணப்பட்டார். முகத்தில் எந்தவிதமான சந்தோசமான உணச்சிகள் அற்று இருந்தது. இந்த முடிவுக்கும் அவருக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பதே அதன் வெளிப்பாடாக நியூஸ் தமிழ் இணையம் அறிகின்றது. பல பக்கத்தாலும் கோத்தபாயவின் தந்திரத்தாலும் உருவாக்கப்பட்ட அழுத்தம் காரணமாக , மஹிந்த இந்த முடிவு எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
அவருக்கு தெரியும், இது ஒரு தீர்ப்பு முனையான தருணம் கோத்தபாய ராஜபக்சவுக்கு, ஆனால் அவர் மகன் நாமல் ராஜபக்சவுக்கு ? .சங்குதான் ….காலம் தான் பதில் சொல்லும்

இதற்கு முன் நியூஸ் தமிழில் வெளிவந்த கட்டுரையை உங்களுக்காக பிரசுரிக்கிறோம்

கோத்தபாய ராஜபக்சவை போட்டி இடுவதற்கு மஹிந்த   அனுமதிப்பாரா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. பெரும்பான்மையான ஆதரவு கோத்தபாய ராஜபக்சவுக்கு உள்ளதுபோல ஊடகங்களில் செய்தி வெளியிடப்படடாலும் இன்னமும் அவர் போட்டியிடுவார் என்று உத்தியோகபூர்வமாக   மொட்டு கடசியினால்( பொது ஜன பெரமுனாவினால் ) அறிவிக்க படாமலேயே உள்ளது. மஹிந்த  ராஜபக்சவும் இதுவரையில் எதுவும் பிடிகொடாமல் ஊடகங்களில் சாமர்த்தியமாக பேசிவருகின்றார்.

 

மஹிந்த ராஜபக்சவை பொறுத்த வரையில் எப்படியாவது தான் அல்லது தனது மகனான நாமல் ராஜபக்சவையே பதவியில் இருத்துவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அதுவே அவரது குடும்ப வாரிசான நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்யும். இடையில் கோத்தபாயவை பொறுப்பில் அமர்த்துவதை மஹிந்த துளியளவிலும் விரும்பவில்லை. தற்போதைய அரசியல் அமைப்பின்படி 36 வயது நிரம்பிய ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். நாமல் ராஜபக்ச இதற்க்கு இன்னும் குறைந்தது 3 வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்சவை பொறுத்தவரயில் அவருக்கு தற்காலிகமாவே ஒருவர் ஜனாதிபதியாக தேவைப்படுகின்றார். அதுவும் தனது சொல்லை தட்டாத  தனக்கு விசுவாசமானவரயே அவர் நிறுத்துவதற்கு எண்ணியுள்ளார். அவரின் தெரிவும் பெரிதும் சாமல் ராஜ்பக்சவாகவே இருந்து வந்தது.இடையே மஹிந்தவின் துணைவியார் சிராந்தி ராஜபக்ச போட்டியிடவுள்ளார் என்றும் யூகங்கள் வெளியிடப்பட்டன. தற்போது பசில் ரஜபக்சவின் பெயரும் அடிபட தொடங்கியுள்ளது. மஹிந்தவுக்கு நன்கு தெரியும் கோத்தபாய ராஜபக்ச எவ்வளவு பிரசித்தமானவர் என்றும் , அவர் போட்டியிடடால் வெற்றி 100% உறுதி என்பதும்.
ஆரம்பத்தில் கோத்தபாய ராஜபக்சவும் பொறுமையாக  இருந்தார், அண்ணன் மஹிந்த எப்படியும் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார் என்று. காலம் செல்ல செல்ல பொறுமையிழந்த கோத்தபாய ராஜபக்ச ,நாடு முழுக்கவும் தனது எலிய  அமைப்பின் மூலம் பிரச்சாரம் செய்து தனது மக்கள் ஆதரவை காட்டுவதன் மூலம்  மஹிந்த ராஜபக்சவுக்கு  தன்னை ஜனாதிபதி வேட்பளராக  அறிவிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தை  ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் கோத்தபாய ராஜபக்ச ஒன்றை மஹிந்தவுக்கு உணர்த்தியுள்ளார். அது என்னெவென்றால் , அண்ணன் தம்பி உறவு என்றாலும் பதவி என்று வந்து விட்டால் அதிலும் ஒரு எல்லை உண்டு. இது மஹிந்தவுக்கு நன்றாக தெரியும். இதனால் தான் சாமலின் பெயரை உச்சரித்த மஹிந்தவுக்கு கோத்தபாய ராஜபக்சவின் பெயரை உச்சரிப்பது வேப்பெண்ணை மாதிரி உள்ளது. மஹிந்தவுக்கு நன்றாக தெரியும் , கோத்தபாய ராஜபக்ச பதவிக்கு வந்தால் தனது மகனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் அவர் எப்படியும் 2 தவணை ஆட்சியில் இருப்பார். இதன் 10 வருடத்தில் மஹிந்தவும் நாமலும் ஓரம் கட்டுபடலாம் , அதைவிட மஹிந்த 83 வயதை தொட்டுவிடுவார்.

இது எல்லாம் தான் கோத்தபாய ராஜபக்சவை இன்னும் மஹிந்த அறிவிக்காமல் இருப்பதற்கான காரணம். மஹிந்த இப்பொழுது தேடிக்கொண்டிருக்கும் வேட்பாளர் தற்காலிகமான ஒருதவணைக்கு மட்டுமேயான தனது நம்பிக்கைக்கு உரிய விசுவாசியை. கோத்தபாய ராஜபக்சே கடைசி நேரத்தில் கழட்டிவிடுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக யூகங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதற்கு கோத்தபாயவின் உடல் நிலையும் காரணமாக கூறுவர்த்திக்கும் சாத்தியம் உண்டு.  அவ்வாறு இல்லாமல் கோத்தபாய ராஜபக்சவை மஹிந்த அறிவிப்பாரானால் அவர் எதிர் பார்த்தமாதிரி அவரினதும் நாமலினதும் அரசியல் எதிர்காலம் அந்தரத்தில் தொங்குவதற்கான சாத்தியங்களும் அதிகமாக உண்டு.  தந்தையை நஞ்சு கொடுத்து கொன்று அரியணை ஏறிய மஹாவம்ச கதைகளை போல இதுவும் ஒரு நவீன மகாவம்ச கதையாகலாம். காலம் தான்  பதில் சொல்லும் , பொறுத்து இருந்து பார்ப்போம்!!!

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்