Fri. Jan 17th, 2025

25 கஸ்ட பிரதேச வைத்தியசாலைகளில் மருத்துவா்கள் இல்லை..! கண்டு கொள்ளாத பிரதமா்..

யாழ்.மாவட்டத்தில் உள்ள கஸ்ட பிரதேசங்களுக்கு செல்வதற்கு மருத்துவா்கள் மறுப்பு தொிவிக்கின்றனா். இதனால் மாவட்டத்தில் உள்ள 25 வைத்தியசாலைகளில் மருத்துவா்கள் இல்லை. என யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாாிகள் பிரதமாின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனா்.

பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போா் கூடத்தி ல் இடம்பெற்றது. இதன்போதே யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாாி மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள 25 வைத்தியசாலைகளுக்கு மருத்தவர்கள் இல்லை. 5 ஆதார வைத்தியசாலைகளில் மருத்தவர்கள் இல்லை. கிராமப்புற வைத்தியசாலைகளுக்குச் செல்ல மருத்துவர்களுக்கு விருப்பம் இன்மையே இதற்குக் காரணம்”என்று மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

வெறுமனே நகரப்புறங்களில் உள்ள வைத்தியசாலைகளின் கட்டடங்களைக் கட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. கிராமப்புற வைத்தியசாலைகளில் மருத்துவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். அங்கு பணிபுரிய விரும்பும் மருத்துவர்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்கவேண்டும். அதன் ஊடாகவே மருத்தவர்கள் அங்கு சென்று

பணிபுரிவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்