Mon. May 18th, 2026

23 மில்லியன் அரச பணம், 39 தடவைகள் வெளிநாட்டு பயணம். உல்லாசமாக வாழ்ந்த அரச அதிகாாி சிக்கினாா்.

கடந்த 5 ஆண்டுகளில் 23 மில்லியன் ரூபாய் பணம் செலவிட்டு 39 தடவைகள் வெளிநாடுகளுக்கு சென்றுவந்த நாடாளுமன்ற அதிகாாி ஒருவா் சிக்கலில் மாட்டியுள்ளாா்.

விமான டிக்கெட்டுக்காக 6.7 மில்லியன் ரூபாவும், பயண செலவுகளுக்காக 16 மில்லியன் ரூபாவும் இந்த தொகையினுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி கடந்த 2014 ‍ஆம் ஆண்டில் 7 தடவையும், 2015 ஆம் ஆண்டில் 5 தடவையும், 2016 ஆம் ஆண்டில் 7 தடவையும், 2017 ஆம் ஆண்டில் 8 தடவையும், 2018 ஆம் ஆண்டில் 10 தடவையும்

மற்றும் இந்த ஆண்டில் இதுவரை இரு தடவையும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி, நியூசிலாந்து, நோர்வே மற்றும்

சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கே அவர் இவ்வாறு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அங்கு அவர் பல்வேறு பயற்சிப் பட்டறை மற்றும்

கருத்தரங்குளில் கலந்து கொண்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed