Thu. Sep 17th, 2026

2027 ஆம் ஆண்டிற்கான ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டித்தொடருக்கான வீராங்கனைகள் தெரிவு

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் 2027 ஆம் ஆண்டிற்கான ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்
போட்டித்தொடருக்கான வீராங்கனைகளைத் தெரிவு செய்து குழுவில் இணைத்துக் கொள்வதற்கான தெரிவுப் பரீட்சை எதிர்வரும் 6ம் திகதி காலை 7.00 மணி முதல் டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
2006.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்த வீராங்கனைகள் மாத்திரம் இத்தெரிவுப் பரீட்சையில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என்பதுடன்
5 அடி 8 அங்குலம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயரமுடைய வீராங்கனைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.
எவ்வாறாயினும், உயரம் குறைவாக இருந்தாலும் சிறந்த திறமையைக் கொண்ட வீராங்கனைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படும் அத்துடன் 6 அடிக்கு மேற்பட்ட உயரமுடைய வீராங்கனைகள்
திறமையில் குறைவாக இருந்தாலும், 6 அடிக்கு மேற்பட்ட உயரமுடைய வீராங்கனைகளை எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்வதற்காக அவர்களைப் பயிற்சி குழுவில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும்  இணைந்த சங்கம், பாடசாலை, விளையாட்டுக் கழகம், இளைஞர் கழகம் அல்லது வேறு எந்த நிறுவனத்திலும் உள்ள தகுதியுடைய எந்தவொரு வீராங்கனைக்கும் இத்தெரிவுப் பரீட்சையில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதியுடைய வீராங்கனைகளை இத்தெரிவுப் பரீட்சைக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் உங்கள் அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
இலங்கையை வெற்றியடையச் செய்வதற்காக உங்கள் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு வழங்குமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அறிவித்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply