2023 ஆம் ஆண்டளவில் மன்னார் பகுதியில் எண்ணெய் உற்பத்தி ,கிழக்கிலும் ஆய்வு-வளம் கொழிக்கும் தமிழர் தேசம்
2023 ஆம் ஆண்டளவில் மன்னார் பகுதியில் எண்ணெய் உற்பத்தியைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு அகழ்வுபணிக்காக இந்தவருடம் நவம்பர் மாதமளவில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் 2023 ஆம் ஆண்டளவில் எண்ணெய் அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
முன்னர் நடத்தப்பட ஆய்வில் மன்னார் பகுதியில் 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள இடங்களில் ஒரு பில்லியன் பர்ல் எண்ணெய் இருப்பதாக இந்தியாவின் கெய்ன் இந்தியா நிறுவனம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது
இதனிடையே இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் இருப்பது பற்றி ஆய்வு செய்ய பிரான்ஸ் மற்றும் நோர்வேயை சேர்ந்த நிறுவனங்கள் ஈடுபடவுள்ளன. பிரான்ஸ்ஐ மையமாகக்கொண்டு இயங்கும் டோடல் (Total ) என்ற நிறுவனமும் நோர்வே நிறுவனமான இகுயினோர் என்ற இரு நிறுவனங்களே இந்த ஆய்வில் ஈடுபடவுள்ளன. இவை இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள JS-5 மற்றும் JS-6 என பெயரிடப்பட்டுள்ள இரண்டு பகுதிகளில் இந்த ஆய்வை மேற்கொள்ளவுள்ளன. இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட செசிமிக் ஆய்வில் இந்த பகுதிகளில் அதிக எண்ணெய்வளம் இருப்பது உறுதிபட்ட நிலையிலேயே இந்த இரு நிறுவனங்களும் அடுத்தகட்ட ஆய்வுக்கு செல்கின்றன.