2021 சித்திரை வருடப்பிறப்பிற்கு இந்தியன் 2 வெளிவருமாம்
சங்கர் இயக்கத்தில் கமலின் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளிவந்த இந்தியன் படம் மெகா ஹிட் படமாக வெற்றி நடைபோட்டது. அதன் பின்னர் இருவரும் இணைந்து பணி புரியவில்லை. ஆனால் மீண்டும் கமல்- சங்கர் கூட்டணி இணைந்து இந்தியன் இரண்டாம் பாகம் ஆரம்பித்துள்ளனர். அநேகமாக கமல் திரையுலகில் இருந்து அரசியல் நோக்கி செல்லவுள்ளதால் இது கமலின் இறுதிப் படமாக அமையலாம்.
இதில் காஜல் அகர்வால், சித்தார்த் , ராகுல் பிரித்சிங் ஆகியோருடன் வில்லன் பாத்திரத்தில் வித்யூத் ஜம்வால் நடிக்கின்றார்.
லைக்கா புரடெக்ஸன் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.