Thu. Mar 28th, 2024

2020-2023 சனிப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்

வாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது.

சனிப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனி என்பதால் பட்ட காலிலே படும் என்பதால் அதிக கவனம் தேவை. தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் ஜாக்கிரதையாக பேசவும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து பேசவும். பாத சனி நடக்கும்போது கவனம் தேவை. பாத சனி நடக்கும்போது பலருக்கு காலில் பிரச்சினை வந்திருக்கிறது. சிலருக்கு காலில் கட்டுபோடும் நிலை வந்திருக்கிறது. எனவே நடப்பது,ஓடுவது,வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை. சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் வரும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். கூட்டு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலை காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்று போரட வேண்டி வரும். சனிபகவான் 3ஆம் பார்வையாக உங்கள் ராசியின் 4ஆம் இடத்தை பார்ப்பதால் உயர் கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும். இதுவரை மனதில் இருந்து வந்த இனம் தெரியாத பயம், கவலை, மனக் குழப்பம் நீங்கி அதிலிருந்து விடுபட வாய்ப்புகள் அமையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வு இருக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருநள்ளாறு சென்று சனிபகவானை தரிசனம் செய்து வாருங்கள் சந்தோஷம் அதிகரிக்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்