Tue. Apr 16th, 2024

2020-2023 சனிப்பெயர்ச்சி மீனம் ராசி பலன்

வாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது.

சனிப்பெயர்ச்சி மீனம் ராசி பலன்
மீனம் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் சனி சஞ்சரிப்பதால் சனிக்கிழமை செய்யும் செயல்கள் வெற்றி கிடைக்கும். லாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் நன்மை அதிகரிக்கும். இதுநாள் வரை மனதில் குழப்பமாக இருந்திருக்கும். இனி குழப்பம் நீங்கி நன்மையே நடக்கும். லாப ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவானால் உங்களுக்கு வருமானம் பெருகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். லாப சனியால் தன லாபம்,வருமானம் அதிகரிக்கும்,தொழில் அபிவிருத்தி அடையும்,நண்பர்களால்,உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பதவி உயர்வு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் முடியும். இது அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சி. சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். தான தர்மம் செய்யுங்கள். இல்லத்தரசிகளுக்கு உறவுகளிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடன் பணி புரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சனிபகவான் 3வதுபார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். 7வது பார்வையாக சனி பகவான் உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்வையிடுகிறார். குழந்தைகளினால் நன்மை நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு மற்றும் அடிக்கடி மறதி ஏற்பட்ட வண்ணம் இருக்கும். உடலில் சளித் தொல்லை இல்லாமல் கவனித்தல் நலம். நேரத்திற்கு சாப்பிடுங்க கவனம் தேவை. உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடிய சனிப்பெயர்ச்சி என்பதால் செலவு செய்வதற்கு ஏற்ற வருமானத்தையும் சனி வணங்குவார். உங்களின் ராசிக்கு 8வது இடத்தை சனி பார்வையிடுவதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை, விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் கவனமாக சென்று வருதல் வேண்டும். நாமக்கல் நகரில் உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய பாதிப்புகள் குறைந்து மேலும் நன்மைகள் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்