Thu. Apr 25th, 2024

2020 ல் கொரோனா வைரஸ் உலகையே தாக்கும், 2008 ல் கணித்த எழுத்தாளர்

2008 ல் சில்வியா பிரவுன் என்ற அமெரிக்கா பெண்மணியால் எழுதப்பட்ட “நாட்களின் முடிவு: உலக முடிவைப் பற்றிய கணிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள்” (End of Days: Predictions and Prophecies About the End of the World) என்ற புத்தகம் கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் புதிய கவனத்தை பெற்றுள்ளது.

சில்வியா பிரவுன் தனது 5 வயதிலிருந்தே எதிர்கால நிகழ்வுகளை கூறிவந்திருக்கின்றார். இவர் 2008 ல் அச்சுறுத்தும் கணிப்புக்களை கொண்ட “நாட்களின் முடிவு” என்ற புத்தகத்தை வெளியிட்டர். அதில் “2020 ஆம் ஆண்டில், கடுமையான நிமோனியா போன்ற நோய் உலகம் முழுவதும் பரவி, நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய்களைத் தாக்கி, அறியப்பட்ட அனைத்து சிகிச்சையையும் எதிர்க்கும் என்றும், நோயைக் காட்டிலும் ஏறக்குறைய மிகவும் குழப்பமான விஷயம் என்னவென்றால், அது வந்த வேகத்திலேயே  மறைந்துவிடும், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அது தாக்கும் என்றும், பின்னர் முற்றிலும் மறைந்துவிடும்.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தகத்தின் ஆசிரியர் சில்வியா பிரவுன் 2013 இல் இறந்தார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் , பிரவுனின் “நாட்களின் முடிவு: உலக முடிவைப் பற்றிய கணிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள்” என்ற புத்தகம் புதிய கவனத்தை பெற்றுள்ளது. இது அமேசானின் புனைகதை விளக்கப்படத்தில் 2 வது இடத்தைப் பிடித்தது, மேலும் இதன் பிரதிகள் இப்போது நூற்றுக்கணக்கான டாலர்களுக்கு விற்கப்படுகின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்