2020 ஜனவரி முதல், வடமாகாணத்தில் ஒதுக்கீடு முறையில் வேலைவாய்ப்பு -ஆளுநர் சுரேன் ராகவன்
2020 ஜனவரி 1 முதல், வடக்கு மாகாண ஆட்சேர்ப்பில் , மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மற்றும் திருநங்கைகளின் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கப்படும் என்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.
இதன்படி ஆட்சேர்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 சதவீதமும் , பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு 5 சதவீதமும், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 3 சதவீதம், மற்றும் திருநங்கைகளுக்கு ஒரு சதவீதம் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்