Sun. Nov 3rd, 2024

2020 சூப்பர் ஸ்டார் நடிக்கும் தர்பார் பொங்கலுக்கு

இயக்குநர் எ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனி நயன்தாரா நடிக்கவிருக்கும் திரைப்படம் தர்பார்.
இத்திரைப்படம் பொங்கலுக்கு றீலீஸாக உள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூரியா நடித்த கஜனி, இளைய தளபதி நடித்த துப்பாக்கி திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தர்பார் படமும் மிகப் பெரிய வெற்றியை தரும் என்ற மகிழ்சியில் ரஜனி ரசிகர்கள் உள்ளனர். இவ்வாண்டு பொங்கலுக்கு வெளியான பேட்டை படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்