Thu. May 21st, 2026

2019ம் ஆண்டிலேயே சட்டவிரோதமாக நாட்டைவிட்டு ஓடியவா்கள் தொகை சடுதியாக அதிகாிப்பு.

2019ம் ஆண்டில் சுமாா் 175 போ் இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியா மற்றும் நியூஸ்லாந்த் போன்ற நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்தபோது கைது செய்யப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.
மேலும் இலங்கை தமது கண்கானிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
2016,2017 மற்றும் 2018 ஆண்டுகளில் சராசரியாக 64 இலங்கையர்கள் நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறுவதற்கு முயற்சித்துள்ளனர்.
எனினும் கடந்த ஆண்டு சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த சுமார் 175 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காடியுள்ளார்.
சிலாபம்,மட்டகளப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளை சேர்ந்தவர்களே பெரும்பாலும் நாட்டை விட்டு சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed