2016,2019 அதிபர் சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தல்
2016, 2019 ஆம் ஆண்டுகளில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட உத்தியோகத்தர்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணங்களுக்காக இதுவரை திசைமுகப்படுத்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் இருப்பின் நாளை மறுதினம் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ள பயிற்சியில் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை திசைமுகப்படுத்தல் பயிற்சியை நிறைவு செய்யாதவர்கள் குறித்த பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயிற்சியை நிறைவு செய்யாதவர்களுக்கு தமது பதவியை உறுதிப்படுத்துவதில் இடர்பாடுகள் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.