200 மில்லியனில் வடக்கு அபிவிருத்தி, யாழ்.மாவட்டத்தில் 11 அபிவிருத் திட்டங்கள்.
யாழ்.குடாநாட்டில் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 11 பாாிய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்ப டுவதாக கூறியிருக்கும் அமைச்சின் செயலாளா் சிவஞான சோதி,
இதற்காக சுமாா் 200 மில்லியன் ரூபாய் பணம் பிரதமாினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஊடாகவே இந்த அபிவிருத்தி பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் கூறியுள்ளாா்.
இதன்படி நீர்வேலியில் மரவேலை தொடர்பான இயந்திர வசதிகளுக்கு நீர்வேலி காமாட்சி அம்பாள் கூட்டுறவுச் சங்கத்திற்கு 3.5 மில்லியன் ரூபாவும்,
நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் செய்வதற்கான இயந்திர உபகரணங்களுக்கு 7.7 மில்லியன் ரூபாவும், நீர்வேலி வாழைநார் அடிப்படையிலான உற்பத்திகள்
உள்ளடங்கலாக 102.89 மில்லியன் ரூபா பெறுமதியான கருத்திட்டங்கள் இவ்வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.