Fri. Mar 29th, 2024

20 வயது தேசிய கபடி சாதித்தன கிளிநெச்சி பாடசாலை அணிகள்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான தேசிய மட்ட கபடிப் போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய அணி சம்பியன் கிண்ணத்தையும் கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய அணி வெள்ளிப் பதக்கத்தையும் சுவீரித்து தேசிய மட்டத்தில் சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கபடிப் போட்டியின் இறுதியாட்டம் நேற்று  கேகாலையில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் வடமாகாண கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான உருத்திரபுரம் மகா வித்தியாலய அணியை எதிர்த்து கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய உருத்திரபுரம் மகா வித்தியாலய அணி 61:21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீரித்ததுடன் கோணாவில் மகா வித்தியாலய அணி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று  முதன்முறையாக தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சாதனையைப் பதிவு செய்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்