யாழ் பல்கலையில் தமிழமுதம் நிகழ்வு ஆரம்பம்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் “மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்’ என்ற தொனிப் பொருளில் நடத்தப்படும் தமிழமுதம் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.

தமிழர் கலாசார பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த சிலம்பு, கரகம், பொம்மலாட்டம், புலியாட்டம், கம்படி, கரகாட்டம் மற்றும் இன்னியம் முழங்க விருந்தினர்கள் பிரதான வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் முதன்மைவிருந்தினராகக் கலந்து கொண்டார். ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியான வடக்கு மகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் நிகழ்வுக்கு வருகை தந்திருந்திருந்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி. மணிவண்ணன், அதன் செயலாளர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர் அத்தோடு .
மாணவர்கள், பல்கலைக் கழக சமூகத்தினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.