Fri. Mar 29th, 2024

16,17 வயதுப் பிரிவினருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

நாளை மறுதினம்  திங்கட்கிழமை முதல் 16,17 வயதுடைய வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும் பைஸர் கோவிட்-19 தடுப்பூசியானது நாடளாவியரீதியில் ஓக்டோபர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டுவருகிறது.
அந்தவகையில் அடுத்தகட்டமாக வட மாகாணத்தில் 16, 17 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு பைஸர்  கோவிட்-19 தடுப்பூசியானது ஒருதடவை மாத்திரம் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது.
மேலும் பாடசாலையைவிட்டு விலகிய 16 தொடக்கம் 19 வயதுடையவர்களுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் சனிக்கிழமைகளில் இத்தடுப்பூசியானது வழங்கப்படும்.
இத்தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்கு 16 தொடக்கம் 19 வயதுடைய அனைவரும் தமது தேசிய அடையாள அட்டையினை அன்றையதினத்தில் தமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சமர்ப்பித்து தமது வயதினை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் பிரதி சனிக்கிழமைகளில் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அல்லது பாடசாலையில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்