Mon. Feb 10th, 2025

16 வயது சிறுமி கா்ப்பம், நுண்கடன் நிதி நிறுவன முகாமையாளருக்கு நடந்த கதி.

16 வயது சிறுமியை கா்ப்பவதியாக்கிய நுண்கடன் நிதி நிறுவனத்தின் முகாமையாளா் ஒருவரை விளக்கமறிய லில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு, களுவாங்கேணி பகுதியில் வசிக்கும் 16 வயதான குறித்த யுவதி கடந்த வருடம் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இயங்கிவரும்

நுண்கடன் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த வருடம் குறித்த யுவதியை அந்த நிறுவனத்தின் முகாமையாளர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த

நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தையை பிறசவித்த நிலையில் குறித்த யுவதியும் குழந்தையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த யுவதி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக குறித்த நுண்கடன் நிதிநிறுவனத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டு

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்