150 வருடகால பொலிஸ்துறை வரலாற்றில் முதல் தடவையாக பெண் பொலிஸாருக்கு பதவி உயா்வு.
இலங்கை பொலிஸ்துறை வரலாற்றில் முதல் தடவையாக 8 பெண் பொலிஸாருக்கு பொலிஸ் அத்தியட்சகா் பத வி வழங்கப்படவிருக்கின்றது.
இதுவரை காலமும் இந்த பதவிக்கான வெற்றிடம் ஒரு பெண் அதிகாரிக்கு மட்டுமே இருந்தது. இதேவேளை, எதிர்வரும் காலங்களில்,
காவல்துறை ஆணையகத்தின் அனுமதியுடன் ஒரு பெண் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரும் இரண்டு காவல்துறை மா அதிபர்களும்
நியமிக்கப்பதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.