Thu. Apr 25th, 2024

15 வருடங்களின் பின் நெல்லியடியில் அலைகடல் என திரண்ட மக்கள்

பொத்துவிலில் தொடக்கம் பொலிகணடி வரைக்குமான நடைபயணம் நெல்லியடி நகரை அடைந்தப்பொழுது நெல்லியடியில் மக்கள் அலைகடல் என்று திரண்டு ஆதரவு தெரிவித்தார்கள்.

 

நெல்லியடியில் முதல் கரும்புலி மில்லருக்கும் அக வணக்கம் செலுத்தப்பட்டது.

 

பெருந்திரளான மக்கள் வாகனங்களிலும் மோட்டார் சைக்கிள்களும் ஆட்டோக்களிலும் பவனி வந்தது நெல்லியடி புதிய சந்தை பகுதிகள் ஊர்வலம் இரு பக்கங்களும் அமைதியாக நடை பவனியாக நகரப்பகுதிவரை சென்றார்கள்.

நெல்லியடி வர்த்தக சங்கம் மற்றும் நெல்லியடியில் உள்ள முஸ்லீம் கடை உரிமையாளர்கள் குளிர்பானம் வழங்கி அவர்களை வரவேற்றார்கள்.

அதன் பின்னர் பொலிகண்டி வரை ஊர்வலம் பொலிஸாரின் தடைகளையும் மீறி சென்றது. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். 15 வருடங்களின் பிறகு வடமராட்சிப் பகுதியில் இப்படியான ஒரு பெரும் திரளான மக்கள் திரண்டு ஊர்வலம் ஒன்றை பார்க்கக்கூடியதாக இருந்தது. உரிமைக் கோஷங்கள் பாதைகளும் கொண்டு செல்லப்பட்டன. இதன் பொழுது சில மக்கள் உணர்ச்சிவசப்பட்டு நிற்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்