Thu. May 21st, 2026

137 நிறுவனங்களிலிருந்து சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் பணி நீக்கம்!

கொழும்பு நகரில் உள்ள 137 நிறுவனங்களில் பாதுகாப்பு கடமையிலிருந்த சிவில் பாதுகாப் பு திணைக்கள ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த மாத நடுப்பகுதி முதல் குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளிலிருந்து அகற்றப்படவுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னெடுக்கப்படும்

விவசாய நடவடிக்கைகள் மற்றும் விகாரைகள், பாடசாலைகளின் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனைத் தவிர, யானை பிரச்சினை காணப்படும் பகுதிகளில் யானை வேலிகளை அமைத்து அதனை நிர்வகிக்கும் நடவடிக்கைகளிலும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை

ஈடுபடுத்தவுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed