13 வயதுடைய பாடசாலை மாணவி தாத்தா, மாமா மற்றும் சகோதரனால் துஸ்பிரயோகம்
மொனராகலை, எதிமலை பொலிஸ் பிரிவில் 13 வயதுடைய பாடசாலை மாணவி வயிற்றில் வலி இருப்பதாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபொழுது , அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக வைத்தியரால் உறுதி செய்யப்பட்டது
மருத்துவமனை அதிகாரிகளின் எச்சரிக்கையின் பேரில் எதிமலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். மாணவியின் தகவலின் படி , அவரது தாத்தா, அவரது மாமா (தாயின் சகோதரர்) மற்றும் அவரது மூத்த சகோதரரால் தொடர்ந்து வன்புணர்வு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் மருத்துவ பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ மொனராகலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
சிறுமியின் சகோதரனை கைது செய்த பொலிசார், அவரது தாத்தா மற்றும் மாமாவை கைது செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர்.