Sun. Oct 6th, 2024

1200 மில்லியன் தாருங்கள் காணியை விடுகிறோம்..! பேரம் பேசிய இராணுவம்..

பலாலி வீதியின் கிழக்கு பக்கத்தில் உள்ள காணிகளை விடுவிக்க 1200 மில்லியன் ரூபாய் பணம் தேவை. அதனை அரசாங்கம் வழங்கவில்லை. என பிரதமாிடம யாழ்.மாவட்ட பாது காப்பு படைகளின் கட்டளை தலமைய அதிகாாிகள் கூறியுள்ளனா்.

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ்.மாவட்ட செயலக கேட் போா்கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இராணுவம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கருத்து கூறும்போது பலாலி வீதியின் கிழக்கு புறமாக உள்ள மிக வளமான விவசாய நிலங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதை சுட்டிக்காட்டியதுடன்,

குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினா். தொடா்ந்து நாாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜாவும் அ தனை வலியுறுத்தியுள்ளதுடன், வல்லை அராலி வீதி மற்றும் மயிலிட்டியில் 3 கிராமசேவகா் பிாிவுகள்

தொடா்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன் இராணுவத்தின் இந்த நடவடிக்கை பொருளாதார மேம்பாட்டுக்கு பாாிய தடை என சுட்டிக்காட்டினாா்.

இதற்கு பதிலளித்த யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேற்படி காணிகளை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங் கத்திடம் கோாியிருந்தோம் ஆனால் அந்த நிதியை அரசாங்கம் தரவில்லை என்றாா்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்