12, 26ம் திகதிகளில் ஆசிரியர் போராட்டம் – இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
எதிர்வரும் 12ம் திகதி மற்றும் எதிர்வரும் 26ம் திகதிகளில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் போராட்டம் இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிபர், ஆசிரியர்களின் அடுத்த கட்ட சம்பள வழங்கல், அதிபர்கள், ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் மாணவர்களின் கல்விச் சுமை என்பவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அனைத்து கல்வி வலயங்களுக்கு முன்பாகவும், 26ம் திகதி கொழும்பு நகரில் அனைத்து இடங்களிலும் உள்ள ஆசிரியர்களை அழைத்து போராட்டத்தில் ஈடுபடவும் உள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.