11 மாணவா்கள் மீது தொடா் பாலியல் துஷ்பிரயோகம். .ஆசிரியர் கைது
பதுளை மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 11 மாணவா்கள் மீது பாலியல் துஸ்பிரயோபம் புாிந்த ஆசிாியரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கணித பாடம் நடத்தும் மேற்படி 44 வயதுடை ஆசிரியர் பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆசிரியருக்கு எதிராக பதுளை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் வரை 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.