Tue. Apr 23rd, 2024

10000 மீற்றர் ஓட்டத்தில் சென்தோமஸ் வீரர்கள் சாதிப்பு

பருத்தித்துறை பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்களுக்கான 10000 மீற்ரர் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பருத்தித்துறை சென்தோமஸ் வீரர்கள் பெற்றுக் கொண்டனர்.
பருத்தித்துறை பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான தடகளத் தொடர் இன்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதன் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் அணியை பிரதிநிதித்துவம் செய்த அ.ரெஜிராஜ் முதலாமிடத்தையும்,  ரி.அருள்சீலன் இரண்டாமிடத்தையும், ரெ.அருள்ராஜ் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்