100 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு!!
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைத் தீவு பிரதேசத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 100 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இரண்டு பொதிகளில் சுற்றப்பட்டு இருந்த நிலையிலேயே மேற்படி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகளை மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண சுங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.