Sat. Apr 20th, 2024

ஹாட்லிக் கல்லூரிக்கு சம்மட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கங்கள்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடரில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளனர்.
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் அண்மையில் தியகம ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த தருண் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 31.60 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், ஆர்.சஞ்சய் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 31.91 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்