Thu. Apr 25th, 2024

ஹற்றன் நேஷனல் வங்கியின் முன்மாதிரியான செயற்பாடு

கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி தொழில் மற்றும் வியாபார நடவடிக்கைகளால் பாதிப்படைந்தோருக்கு அவர்களின் தொழிலை மீள கொண்டு நடாத்துவதற்காக  ஹற்றன் நஷனல் வங்கியால் ஒரு லட்சம் ரூபா  நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பருத்தித்துறை ஹற்றன் நேஷனல் வங்கியினரால் அவர்களின் பயனாளிகள் இருவருக்கு இன்று வெள்ளிக்கிழமை  காசோலைகள் வழங்கப்பட்டது. பருத்தித்துறையில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் முயற்சியாளர் திருமதி நந்தகுமார் நரோஜினி மற்றும் மீன்பிடி தொழில் முயற்சியாளர் கணபதிபிள்ளை கணநாதன் ஆகியோருக்கு 50 ஆயிரம் ரூபா காசோலைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பருத்தித்துறை பிராந்திய விற்பனை பகுதி முகாமையாளர் கணேசன் மாதுளன், பிராந்திய நுண்நிதியியல் பிரிவு அதிகாரி செல்வராசா செந்தூரன், வங்கி முகாமையாளர் நடேசன் கிரிதரன் நுண்நிதி வங்கி முகாமையாளர் யோகநாதன் பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நாடுமுழுவதும் 200 பேருக்கு வழங்கவுள்ளதுடன் வடபிராந்தியத்தில் 28 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்