Fri. Apr 19th, 2024

வைத்தியசாலை ஊழியர்கள் பொலீஸார் எரிபொருள் பெறுவதில் மும்முரம் மக்கள் விசனம்

எரிபொருள் வழங்கப்படும் நேரத்தில் வைத்தியசாலை ஊழியர்கள், பொலீஸார் போன்றோர் எரிபொருள் பெறுவதையிட்டு பொதுமக்கள் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

இன்று நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டது.
6600 லீற்ரர் நிரப்பப்பட்டது. எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் பல நாட்களாக வெயில் மழை என்பவற்றில் காத்திருந்தனர்.
இதில் நெல்லியடி மத்திய கல்லூரியில் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் பல தூர இடங்களில் இருந்தும் வருகை தந்து பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் தமக்கு எரிபொருள் தரப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் பொலீஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமல வீர அவர்களினால் இன்று பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் அரச உத்தியோகஸ்த்தர்கள் வைத்தியர்கள்,  வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட பொலீஸாரும் எரிபொருளை நிரப்பியுள்ளனர். இதில் ஒரு பொலீஸ் உத்தியோகஸ்த்தர் 3000/= விற்கும்,  வேறொரு பொலீஸ் உத்தியோகஸ்த்தர் 2500/= விற்கும் கொள்வனவு செய்தனர், இதற்கிடையில் வைத்திய அத்தியட்சகர் , வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் எனப் பலரும் வரிசையில் காதிருகாமல் பெற்றது ஏனையோரை வேதனைகாகுள்ளாக்கியுள்ளது.
அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய தேவைக்காக எரிபொருள் சேமிக்கப்பட்டு, வைத்தியசாலை ஊழியர்கள்,  பொலீஸார் என வழங்கப்படுகின்ற போதிலும் இவ்வாறான நெருக்கடி நேரத்தில் எரிபொருளை பெறுவது எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்