Fri. Apr 19th, 2024

விளாவெளி மயானத்திற்கு மின்தகனசாலை அவசியம் -பிரதேச சபை உறுப்பினர் மகேந்திரன் வலியுறுத்து

விளாவெளி மயானத்திற்கு மின்தகனசாலை அமைப்பதற்கு பிரதேச சபை முன்வர வேண்டும் என வலி. தென் மேற்கு  பிரதேச சபை உறுப்பினர் மகேந்திரன் கேட்டுள்ளார்.
வலி.தென் மேற்கு பிரதேச சபைத் தலைவர் அ.ஜெபநேசன் அவர்களால் மின் தகன மயானசாலையை அமைப்பதற்கு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு கருத்திட்ட முன்மொழிபு பத்திரத்தை தயாரித்து முன்வர வேண்டும் அன பிரதேச சபை உறுப்பினர் கோரியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலி. தென் மேற்கு பிரதேச சபை 59 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை கொண்ட பரந்து – விரிந்த பாரிய பிரதேசத்திற்கு மின் தகன மயானசாலை மிக அவசியமாகும்.
கொரனா மரணங்கள் மற்றும் சாதாரண மரணங்கள் என்பன அதிகரித்து வருகிறது.
வலி.தென் மேற்கு பிரதேசம் 28 கிராம அலுவலர் பிரிவினை கொண்ட பரந்த பிரதேசம். இப்பிரதேசத்தின் மின்தகன சாலை குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கொரனா வைரஸ் தொற்று ஏற்பட முன்னர் நாம் மின்தகன சாலையின் தேவை குறித்து வலி.தென்மேற்கு பிரதேச சபைக்கும் – வலி.தென் மேற்கு பிரதேச செயலகத்திற்கும் கடிதம் மூலமாக தெரியப்படுத்தியதுடன் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் ஆராய்யப்பட்டது.
தற்போது மயான தொழிலாளி, உயர் அழுத்த மின்சாரம், இருபக்க போக்குவரத்து வசதி, பரந்த நிலப்பரப்பு, கட்டிட வசதிகள் கொண்ட பிரான்பற்று விளாவெளி மயானத்தில மின்தகன சாலை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சியை சபையில் முன்னெடுத்து சபைத் தீர்மானம் மேற்கொண்டு அதற்கான கருத்திட்ட முன்மொழிபு பத்திரத்தினை உடன் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கு சமர்ப்பிப்பதன் மூலம் விளாவெளி மயானத்திற்கு ஆபத்து – பேரிடர் சூழ்ந்த இக்காலகட்டத்திலும் – எதிர்காலத்திலும்  மின் தகன சாலை அமைப்பது சாலப்பபொருத்தமாதாகும்.
எனவே ஒருங்கிணைந்த அடிப்படையில் இத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் உடலங்களை உடனுக்குடன் தகனம் செய்வதுடன் பிரதேச சபையும் மெய் நிகர்வருமானத்தை எய்தும் ஏது நிலை உருவாகும்.
அத்துடன் ஏனைய உள்ளுராட்சி மன்ற பிரதேச மக்களின் உடலங்களும் இங்கு உடனுக்குடன் எரியூட்டப்படும் வசதிகளும் எமது சபை தவிசாளரால்  ஒழங்கு செய்து வழங்கப்படும் நிலையும் உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்