Thu. Apr 25th, 2024

வினித் கோல் மழை கலைமதி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

வினித்தின் கோல்மழையால் நவிண்டில் கலைமணி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் வடமராட்சி பிரதேச அணிகள் பங்கு பற்றும் “இளையோர் வெற்றிக் கிண்ணத்திற்கான ” கால்பந்தாட்ட தொடர் இமையாணன் மத்தி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நவிண்டில் கலைமதி அணியை எதிர்த்து கரவெட்டி நவசக்தி அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் நவிண்டில் கலைமதி அணி வீரர் வினித் ஹெற்றிக் கோல்களைப் போட்டு அசத்த முதல் பாதியாட்டத்தில் நவிண்டில் கலைமதி அணி 3:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இரண்டாவது பாதியாட்டத்திலும் வினித்தின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நவசக்தி அணியினர் திணறினர். இரண்டாவது பாதியாட்டத்திலும் வினித் மேலும் இரு கோல்களைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் நவிண்டில் கலைமதி அணி 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் ஆட்ட நாயகனாக நவிண்டில் கலைமதி அணி வீரர் வினித் தெரிவு செய்யப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்