Fri. Apr 26th, 2024

வாரி சௌபாக்கியா – நீர் செழுமை திட்ட விசேட கலந்துரையாடல்.

 

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய நீர்ப்பாசன அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும்
நீர்ப்பாசன செழுமை திட்டம் முன்னேற்பாடு கலந்துரையாடல் நேற்று  (01.07.2021) காலை 11மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில்
கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ அநுராத ஜயரத்ன அவர்கள் கலந்து கொண்டிருந்த குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அமைச்சர் தற்போதுள்ள அரசாங்கமானது நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு பல கோடி ரூபா நிதியினை ஒதுக்கி உள்ளதாகவும் குறித்த நிதியினை வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு அதிகளவில் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஏற்கனவே பல குளங்கள் புனரமைப்பு செய்ததற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றிருந்த நிலையில் மேலதிகமாக ஒரு தொகுதி குளங்களை தூர்வாருதற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. எனினும் எதிர்வரும் மாத இறுதிக்குள் பெரும்பாலான குளங்கள் தூர்வாரப்பட்டு விவசாயிகளுக்குரிய நீர் தேவையினை வடக்கு மாகாணத்தில் பூர்த்தி செய்வதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன்,அமைச்சின் செயலாளர்,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட கமநல திணைக்கள உதவி ஆணையாளர், வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்