Sat. Apr 20th, 2024

வல்லை பகுதியில் கத்தி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் பொதுமக்களால் பிடிப்பு

வடமராட்சி வல்லைப்பகுதியில் , வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பொது மக்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இன்றோ இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் , புத்தூர் பகுதியில் இறைச்சி வியாபாரம் செய்யும் ஒருவரின் 3 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட நபர்களே இவ்வாறு பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த இறைச்சி வியாபாரி வியாபாரம் முடிந்து வல்லை பகுதியூடாக வீட்டுக்கு சென்றுள்ளார். இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் கத்தி முனையில் வியாபாரியை அச்சுறுத்தி அவரிடமிருந்த 3 லட்சம் ரூபா பணத்தினை கொள்ளை அடித்துள்ளனர்.

சாமர்த்தியமாக செயல்பட்ட இறைச்சி வியாபாரி குறித்த இளைஞர்கள் தப்பி செல்வதற்கு முன்னர் , ஒரு இளைஞனை துரத்திப் பிடித்துள்ளார். பின்னர் பிரதான வீதியில் பயணித்த பொது மக்களினால் இளைஞன் நையப்புடைக்கப்பட்டார்.
தப்பிச்சென்ற இன்னொரு இளைஞன் நாவல் காட்டு பகுதியில் உள்ள கோயில் கேணியில் கால் கழுவிக் கொண்டிருந்த போது கையும் மெய்யுமாக அப்போது இளைஞர்களினால் பிடிக்கப்பட்டார். இதன்போது குறித்த இளைஞனிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்