Thu. Apr 25th, 2024

வலைப்பந்தாட்டத்தில் இறுப்பிட்டி ஏ அணி சம்பியன்

செல்லையா ஏகாம்பரம் ஞாபகார்த்த புங்குடுதீவு இறுப்பிட்டி சன சமூக நிலையத்தின் 73வது நிறைவையொட்டி இறுப்பிட்டி சன சமூக நிலையம், இறுப்பிட்டி விளையாட்டு கழக

கிண்ணத்திற்கான வலைப்பந்தாட்ட போட்டியில் இறுப்பிட்டி ஏ அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.
புங்குடுதீவு அணிகளுக்கிடையே நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் புங்குடுதீவு இறுப்பிட்டி ஏ அணியை எதிர்த்து புங்குடுதீவு நண்பர்கள் அணி மோதியது.
இதில் இறுப்பிட்டி ஏ அணி 19:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்