Fri. Apr 19th, 2024

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன்

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக மறுசீரமைப்பு செய்வதற்காக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களினால் வடமாகாண செயலாளர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஆர்.வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இளங்கோவன் அவர்கள் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார்.
வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய பா.செந்தில்நந்தன் பேரவைச் செயலகத்தின் செயலாளராகவும், மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி சரஸ்வதி மேகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராகவும், பேரவைச் செயலகத்தின் செயலாளராக கடமையாற்றிய பி.குகநாதன் பொது நிர்வாக பிரதிப் பிரதம செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்