Sat. Apr 20th, 2024

வடமாகாணத்தில் உதைபந்தாட்டத்தை வளர்க்க ஆலோசனை

உதைபந்தாட்டத்தை வளர்க்க உதைபந்தாட்ட அபிவிருத்தி  செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கினால் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தில் புதிய நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கான வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தினரால் இலங்கை உதைபந்தாட்ட சங்கத் தலைவரிடம் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மகஜர் கையளிக்கப்படது.
இதில் வடமாகாணத்தில் உதைபந்தாட்டம் வளர்ச்சி கண்டு வருகின்ற போதும் மேலும் சில செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வாகாணத்தில் தன்னிறைவடையச் செய்யலாம் .
உதைபந்தாட்டத்தை – உடற்கல்வி ஆசிரியருக்கு
D தர சான்றிதழ் வழங்குதல்
சிறு வயதுப் பிரிவினருக்கான ” கிறாஸ் பூட் ” பயிற்சி முகாமை நடாத்துதல்
அக்கடமிகளை அழைத்து இயங்கு நிலைக்குக் கொண்டு வரல் கிராமப்புற உதைபந்தாட்ட எழுச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தல்
பாடசாலை மட்டத்தில் அதிக பாடசாலைகளை உதைபந்தாட்டத்தில் உருவாக்குதல் உதைபந்தாட்டக் கழகங்களைத் தரப்படுத்தி போட்டிகளை வகைப்படுத்தல்
உதைபந்தாட்ட கழகங்களுக்கு பயிற்றுநர்கள் கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்தல்
மது , போதையில் ஈடுபடும் வீரர்களை தடை செய்தல்
போட்டிகளில் ஒழுக்கத்தைப் பேணும் கழகங்களுக்கு விசேட நன்கொடை வழங்கல்
வடக்கில் இயங்கும் உதைபந்தாட்ட சங்கங்களுக்கும் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்துக்குமிடையில் நெருங்கிய உறவைப் பேணுதல்
பொது மைதானங்களை அமைத்துக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னுரிமை அடிப்படையில் படிப்படியான செயற்படுத்திக் தருமாறு கோரப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்