Fri. Mar 29th, 2024

வடமராட்சி FA கிண்ண உதைபந்தாட்ட தொடர்

Football.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வடமாராட்சி அணிகளுக்கிடையிலான எவ்.ஏ. கிண்ணத்திற்கான சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் 24ம், 25ம் திகதிகளில் இமையாணன் மத்தி  விளையாட்டுக் கழக மற்றும் கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இதில் 24ம் திகதி இமையாணன் மத்தி விளையாட்டு விளையாட்டுக் கழக மைதானத்தில் காலை 8 மணிக்கு யங்லயன்ஸ் அணியை எதிர்த்து றேஞ்சஸ் அணியும் 9.30 மணிக்கு நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து நவசக்தி அணியும்,  பிற்பகல் 3 மணிக்கு உடுப்பிட்டி இளைஞர் அணியை எதிர்த்து டைமன்ஸ் அணியும் மோதவுள்ளன.
கொலின்ஸ் விளையாட்டு கழக மைதானத்தில் காலை 8 மணிக்கு கருணாகரன் அணியை எதிர்த்து கலைமதி அணியும்,  9.30 மணிக்கு சுடர்ஒளி அணியை எதிர்த்து பொம்மேர்ஸ் அணியும்,  பிற்பகல் 2 மணிக்கு அண்ணாசிலையடி இளைஞர் அணியை எதிர்த்து வல்வை ஐக்கிய அணியும்,  பிற்பகல் 3.30 மணிக்கு கலட்டி ஐக்கிய அணியை எதிர்த்து மனோகரா அணியும் மோதவுள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்