Fri. Apr 19th, 2024

ரணில்-சஜித் ஒன்றரை மணிநேரம் சந்திப்பு , வேறுபாடுகளை களைய முயற்சி.

தற்பொழுது உள்ள அரசியல் நெருக்கடியின் பின்னணியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மைச்சர் சஜித் பிரேமதாசவுடன் வியாழக்கிழமை மாலை அலரி மாளிகையில் ஒன்றரை மணி நேரம் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன .

எம்பிலிப்பிட்டியில் உள்ள ஒரு பௌத்தகோவிலில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்றிருந்த சஜித் பிரேமதாச உடனடியாக அமைச்சர் ஹர்ஷா டி சில்வாவுடன் அலரிமளிகைக்கு சென்றுள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் ராஜிதா சேனரத்ன பிரதமருடன் பங்குபற்றி இருந்தார் .

இந்த சந்திப்பு தற்போதைய நிலைமை குறித்து ஆரோக்கியமான வெளிப்படையான கலந்துரையாடலாக இருந்ததாகவும் அமைச்சர் ஹர்ஷா டி சில்வா கருத்து தெரிவித்துள்ளார். இதில் அமைச்சர் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பளராக நியமிப்பது குறித்து உடனடியாக கலந்துரையாடப்படாத போதிலும் , எவ்வாறு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது என்பது பற்றி கலந்துரையாடியதாகவும் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 11.00 மணி வரை நீடித்தது என்றும் கூறிய அவர் அக்கட்சியின் உள்நெருக்கடியை தீர்ப்பதில் தான் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.இதில் ஹர்ஷா டி சில்வா சஜித் ஆதரவு நிலையும் , ராஜித சேனாரத்ன சஜித் வருவதை எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சஜித் பிரேமதாச ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவேன் என்று கூறியநிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் . சட்ட செயலாளர் நிசங்கா நானாயக்காரா, தேர்தல் ஆணையத்தால் தேர்தல்கள் அறிவிக்கப்படும் வரை ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க கட்சி அரசியலமைப்பு வழங்கவில்லை என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தி இந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்