Fri. Apr 19th, 2024

யாழ்ப்பாண கல்லூரி வலைப்பந்தாட்டம் அனைத்து பிரிவிலும் சம்பியன் கிண்ணத்தை வழித்துத் துடைத்து அராலி சரஸ்வதி

சகல பிரிவிலும் சம்பியன் கிண்ணத்தை அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி கைப்பற்றி வரலாற்றுச் சதனையைப் பதிவு செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி தமது 200வது ஆண்டை முன்னிட்டு நடாத்திய அழைக்கப்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில்
அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி 15,17,19 வயதுப் பிரிவுகளில் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி தமது 200வது ஆண்டை முன்னிட்டு நடாத்திய அழைக்கப்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டங்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணியை எதிர்த்து உடுவில் மகளிர் கல்லூரி அணி மோதியது.
இதில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி 24:15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி பெற்றது.
17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில்  அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணியை எதிர்த்து யாழ்ப்பாண கல்லூரி அணி மோதியது.
இதில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி 10:05 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை பொன்னாலை வரதராஜபெருமாள் அணி பெற்றுக் கொண்டனர்.
15 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில்  அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணியை எதிர்த்து யாழ்ப்பாண கல்லூரி அணி மோதியது.
இதில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி 09:02 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை பொன்னாலை உடுவில் மகளிர் கல்லூரி அணி பெற்றுக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்