Tue. Apr 23rd, 2024

யாழ்ப்பாணக் கல்லூரி 51 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சம்மேளனதிதினால் நடாத்தப்படும் பிரிவு 111ற்கான சுற்றுப் போட்டியின் முதலாவது யாழ்ப்பாண கல்லூரி 51 ஓட்டங்களால்  வெற்றி பெற்றுள்ளது.

இத் தொடரின் முதலாவது போட்டி அண்மையில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் யாழ்ப்பாணக் கல்லூரி அணியை எதிர்த்து மகாஜனக் கல்லூரி அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றனர். அவ்வணி சார்பில் கீதவர்ணன் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சார்பில் கிஸிந்தன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி அணியினரின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறினர்.
இதனால் 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 51 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர். அவ்வணி சார்பில் அதிகபட்சமாக கஜித் 37 , மதீசன் 34 ஓட்டங்களையும், பெற்றனர்.  பந்து வீச்சில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி சார்பில் துவாரகன் மற்றும் பிருந்தன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்