Sat. Apr 20th, 2024

முழங்காவில் ம.வி. சு.கீரன் தங்கம் ம‌ற்றும் வெள்ளி பதக்கத்துடன் வித்தியாலய சாதனை

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடரில் கிளி/முழங்காவில் மகா வித்தியாலய மாணவன் சுமன் கீரன் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை சுவீரித்துள்ளார்.
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் தியகம ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் கிளி/முழங்காவில் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சு.கீரன் 10000 மீற்ரர் ஓட்டத்தில் 35:35.92 வினாடிகளில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தையும்,  5000 மீற்ரர் ஓட்டத்தில் 16:12.63 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்