Sat. Apr 20th, 2024

முழங்காவில் மகா வித்தியாலய எஸ்.கீரன் தேசியத்தில் தங்கம்

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட போட்டியில் ஆண்களுக்கான 5000 மீற்ரர் ஓட்டத்தில் கி/முழங்காவில் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கீரன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 5000 மீற்ரர் ஓட்டத்தில் முழங்காவில் மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கீரன் 16 நிமிடங்கள் 5 செக்கன்கள் 23 மில்லி செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்